கூடைப்பந்து: யுனைடெட்- பி.எஸ்.ஜி., முதலிடம்

Added : ஜன 14, 2020
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, ஆண்கள் பிரிவில், யுனைடெட் அணியும், பெண்கள் பிரிவில், பி.எஸ்.ஜி., அணியும் முதலிடத்தை தட்டி சென்றன.கோவை, 'லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்துார் ஓரியன்' மற்றும் ராக்கர்ஸ் கூடைப்பந்து கிளப் இணைந்து நடந்தும், 10வது ஓரியன் டிராபிக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி கூடைப்பந்து கோர்ட்டில், நடந்தது; 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.சப்- ஜூனியர் மாணவ, மாணவிகள் ஆண்கள், பெண்கள் என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், யுனைடெட் அணி, 74-68 என்ற புள்ளி கணக்கில், ஒய்.எம்.சி.ஏ., அணியை வென்றது.பெண்களுக்கான இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 64-43 என்ற புள்ளி கணக்கில், கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியை வென்றது.சப்-ஜூனியர் மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், ஆர்.எல்.எம்.எச்., அணி, 50-21 என்ற புள்ளி கணக்கில், யங் பிளட்ஸ், அணியையும்; 2வது போட்டியில், சி.சி.எம்.ஏ., அணி, 42-21 என்ற புள்ளி கணக்கில், அல்வேர்னியா அணியையும் வென்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X