மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: ராஜசேகர் மணி எம்.சி.சி., வெற்றி

Added : ஜன 14, 2020
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான இரண்டாம்டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ராஜசேகர் மணி எம்.சி.சி., அணி, நான்குவிக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியும், 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியும், மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது.ரத்தினம் கல்லுாரியில் நடந்த இரண்டாம் டிவிஷன் 'லீக்' போட்டியில், ரெயின்போ கே.எம்.பி சி.சி., அணி, ராஜசேகர் மணி எம்.சி.சி., அணிகள் மோதின. முதலில் விளையாடிய ரெயின்போ அணி, 39.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 116 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ராஜசேகர் மணி அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 35.3 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 118 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த ஐந்தாம் டிவிஷன் 'லீக்' போட்டியில், கிராண்ட் டிராவிட் சி.ஏ., அணி, ஏக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின.முதலில் விளையாடிய கிராண்ட் டிராவிட் சி.ஏ., அணி, 43.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 128 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ஏக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 24.5 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 129 ரன் எடுத்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X