சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி ஊழியருக்கு கத்திக்குத்து

Added : ஜன 14, 2020
Advertisement

ஆர்.கே.நகர்: தண்டையார்பேட்டை, பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 27; சென்னை மாநகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று, தண்டையார்பேட்டை யார்டில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், விஜய் ஆகியோருடன் சேர்ந்து, சக்திவேல் கோலி விளையாடினார். அப்போது ஏற்பட்ட தகராறில், சக்திவேலை கத்தியால் வெட்டி, சதீஷ், விஜய் ஆகியோர் தப்பினர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து, விஜய், 19, என்பவரை கைது செய்தனர். சதீஷை தேடி வருகின்றனர்.
வீட்டில் 23 சவரன் திருட்டு
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், நாராயணியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 59; மத்திய அரசின் எண்ணெய் கழகத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வருபவர். இவர், 6ம் தேதி, தன் குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், 23 சவரன் நகை, 6,000 ரூபாய், கேமரா உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரிந்தது. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பூட்டை உடைத்து 8 சவரன், 'அபேஸ்'
திருவேற்காடு: திருவேற்காடு, கற்பகம்மாள் நகரைச் சேர்ந்தவர், ஆலன் ஜான் போஸ்கோ, 42; தனியார் மருத்துவமனை ஊழியர். நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் நடந்த ஜெபக்கூட்டத்திற்கு, குடும்பத்தினருடன் சென்றார். இரவு, வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 8 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
ரவுடிக்கு 313 நாள் சிறை
பட்டாபிராம்: பட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 25; அவர் கடந்தாண்டு, நவம்பரில் குற்ற வழக்கில் சிக்கினார். அப்போது, 'இனி நான் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டேன்' என, பட்டாபிராம் போலீசில், உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், டிசம்பரில், மீண்டும் குற்ற வழக்கில் சிக்கினார். இதையடுத்து, நன்னடத்தை உறுதி மொழியை மீறிய அவர், 313 நாட்களுக்கு, ஜாமினில் வெளிவர முடியாத வழக்கில், நேற்று மாலை கைதானார்.
வாலிபர்களிடம் மொபைல் பறிப்பு
சென்னை: அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மோகனா, 34. இவர், நேற்று காலை, ஆர்.கே., சாலையில் நடந்து சென்றார். அப்போது டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல்போனை பறித்து தப்பினர். அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராதாகிருஷ்ணன் சாலை, சிட்டி சென்டர் அருகே நடந்து சென்ற உசேன், 35, என்பவரது மொபைல் போனையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர். ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X