தமிழ்நாடு

சென்னையில் '‛ஸ்வாப் ஷாப்' திட்டத்திற்கு அமோக வரவேற்பு! விரிவாக்கம் செய்ய முடிவு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement
சென்னையில் '‛ஸ்வாப் ஷாப்' திட்டத்திற்கு  அமோக வரவேற்பு! விரிவாக்கம் செய்ய முடிவு

அடையாறு:சென்னை மாநகராட்சி துவங்கிய, மறு பயன்பாடுள்ள பொருட்கள் சந்தைப்படுத்தும், 'ஸ்வாப் ஷாப்' திட்டம், அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில், குப்பையை தரம் பிரித்து கையாள, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, மறு பயன்பாடு பொருட்களை, மீண்டும் பயன்படுத்தும் வகையில், மாநகராட்சி, தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், அடையாறு மண்டலத்தில், 'ஸ்வாப் ஷாப்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இதற்காக, 12 மற்றும் 13ம் தேதி, பெசன்ட் நகர், சமூக நலக்கூடத்தில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டது.பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி, புத்தகம், சைக்கிள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை அரங்கில் வைக்கப்பட்டன.இதை, தேவைப்படும் மக்கள் வாங்கிச் சென்றனர். சிலர், வீட்டில் இருந்து கொண்டு வந்த பொருட்களை கொடுத்து, அதற்கு ஈடாக, வேறு பொருட்கள் எடுத்துச் சென்றனர்.
புத்தகம், 5 ரூபாய், துணி, 10 ரூபாய், சிறிய சைக்கிள், 100, 200 ரூபாய் என, பொருட்களின் கையை பொறுத்து, விலை நிர்ணயிக்கப்பட்டது.துணி, செருப்பு, தோள்பை போன்ற பொருட்கள் வாங்கினேன். ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உதவி செய்யும் மனப்பான்மை ஏற்படுத்தும் திட்டம். இலவசம் இல்லாமல், மிக குறைந்த விலை நிர்ணயித்ததை பாராட்டலாம்.-ஆர்.ஜான்மதி, 30, திருவான்மியூர்.
புத்தக கண்காட்சி செல்ல இருந்தேன். அதற்காக ஒதுக்கிய பணத்தில், குறிப்பிட்ட தொகையில், இங்கு, 25 புத்தகங்கள் வாங்கினேன். அறிவியல், பொது அறிவு, குழந்தைகள் புத்தகங்கள் கிடைத்தது. இத்திட்டத்தை, சென்னையில் ஒரு இடத்தில் நிரந்தரமாக அமைக்கலாம்.-எஸ்.சரவணன், 36, பாலவாக்கம்.
சபாஷ் கமிஷனர்!
'ஸ்வாப் ஷாப்' திட்டத்தை நேற்று பார்வையிட்ட, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், பழைய புத்தகங்களை வாங்கினார்.இது குறித்து கமிஷனர் கூறியதாவது: பலரது வீட்டில், மீண்டும் பயன்படுத்த கூடிய பொருட்கள் உள்ளன. அதை, குப்பை தொட்டியில் வீசாமல், பயனுள்ளதாக மாற்றும் இத்திட்டம், மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. நானும், சில பயனுள்ள புத்தகங்கள் வாங்கினேன். படிப்படியாக, இதர மண்டலத்திலும், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
17-ஜன-202007:39:33 IST Report Abuse
vasumathi சென்னை central பக்கத்துல மூர் மார்க்கெட் இருந்தது அனைத்தும் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
15-ஜன-202008:01:51 IST Report Abuse
chandkec பாராட்டுக்கள்.சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த மாதிரி திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. மற்ற இடங்களிலும் இதை பின்பற்ற அரசு ஆணை இடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X