சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டெங்கு'வுக்கு பெண் பலி? சாவில் சந்தேகம் என புகார்

Added : ஜன 14, 2020
Advertisement
 'டெங்கு'வுக்கு பெண் பலி? சாவில் சந்தேகம் என புகார்

கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கத்தில், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கோவிலம்பாக்கம், தமிழ் குடிமகன் நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 30; தனியார் பள்ளி வேன் ஓட்டுனர்.இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி, 24, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. பாரதி, சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, உடல்நிலை மோசமானது. மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.
பாரதிக்கு வரதட்சணை கொடுமை இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவரின் பெற்றோர், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.விசாரணையில், பாரதி டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தது தெரிய வந்தது. இருப்பினும், பெற்றோர் புகாரால், அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X