சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., மகன் விபத்தில் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

மாதவரம்:இரு சக்கர வாகனத்தில் சென்ற போலீஸ் எஸ்.ஐ., மகன், லாரியில் சிக்கி பலியானார்.
புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கர். ராயபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர். அவரது மகன் நிதிஷ்குமார், 21; அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில் பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில், சக ஊழியர்களான சிவா, 21, யாசர் அராபத், 21, ஆகியோருடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.மாதவரம், ஜி.என்.டி., சாலையில் சென்ற போது, அவர்களது வாகனம் மீது, டிப்பர் லாரி மோதியது. அதில், லாரியில் சிக்கிய நிதிஷ்குமார், சம்பவ இடத்தில் பலியானார். மற்ற இருவரும், பலத்த காயமடைந்தனர். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X