சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கட்டடத்திற்கு, 'சீல்'

Added : ஜன 14, 2020
Advertisement

பிராட்வே:பிராட்வேயில், விதிமீறல் கட்டடத்திற்கு மாநகராட்சியினர், 'சீல்' வைத்தனர்.
பிராட்வே, கோவிந்தப்பா நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 50. கடந்த, 2018 ஜூனில், 3,300 சதுரடிக்கு வீடு கட்ட, வாகன நிறுத்தத்துடன் கூடிய, இரண்டு மாடி கட்டடத்திற்கு மாநகராட்சியில் அனுமதி வாங்கினார்.இந்நிலையில், 3,300 சதுரடிக்கு பதிலாக, விதிமீறி, கட்டடத்தின் முன்பக்கம் போதிய இடைவெளி விடாமல், 5,400 சதுரடிக்கு, வாகன நிறுத்தம் பதிலாக, தரைத்தளத்தில் கடையுடன் கூடிய இரண்டு மாடி கட்டடம் கட்டினார்.
விதிமீறல் கட்டடம் குறித்து, ராயபுரம் மண்டல அதிகாரிக்கு புகார் வந்தது.இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் காசி விஸ்வநாதன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சியினர், விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்திற்கு நேற்று, 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X