சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏழு மாத குழந்தை கடத்தல் போலீசார் தீவிர விசாரணை.,.

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை:ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட, ஏழு மாத குழந்தையை கண்டுபிடிக்க, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம், அமராவதியைச் சேர்ந்தவர், ஜான் போஸ்லே. இவரது மனைவி ரந்தேஷா போசலே. பலுான் வியாபாரம்இவர்களுக்கு, ஜான் என்ற ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள், சென்னை, மெரினா கடற்கரையில் தங்கியிருந்து, பலுான் வியாபாரம் செய்து வருகின்றனர்.வழக்கம் போல், நேற்று முன்தினம் பலுான் வியாபாரத்தில் இருந்தபோது, அங்கு வந்த, 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அந்த தம்பதியுடன் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, 'சினிமா துறையில் இருப்பதாகவும், சினிமாவில் நடிப்பதற்கு, ஒரு குழந்தையை தேடி வருகிறேன். உங்கள் குழந்தை அழகாக உள்ளது; குழந்தையை படப்பிடிப்பிற்கு அனுப்பினால், ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி தருகிறேன்' என, ஆசை காட்டியுள்ளார்.அந்த பெண்ணின் பேச்சை நம்பிய தம்பதி, குழந்தையை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்து உள்ளனர்.சினிமாவில் நடிப்பதற்கு முன், குழந்தையை சில மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு, அந்த பெண் அழைத்து சென்றார்.அங்கு, சில மணி நேரம் காக்க வைத்து, 'டாக்டர் இல்லாததால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லலாம்' என, அழைத்து சென்றுள்ளார்.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 'ஏ பிளாக்' கட்டடத்தில் அழைத்து சென்ற அந்த பெண், வெளியே காத்திருங்கள்; டாக்டரை பார்த்து வருவதாக கூறி, குழந்தையை வாங்கி சென்றுள்ளார்.வெகுநேரம் காத்திருந்தும், அந்த பெண், குழந்தையுடன் திரும்பவில்லை. அதன் பின், குழந்தையின் தாய் மருத்துவமனை வளாகத்தில் தேடியுள்ளார். 'சிசிடிவி' கேமராஅந்த பெண்ணும், குழந்தையும் இல்லாததால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை துவங்கினர். முதற்கட்டமாக, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர்.அதேபோல், சென்னையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் அந்த பெண் கைது செய்யப்பட்டு, குழந்தை மீட்கப்படும் எனவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X