பொது செய்தி

தமிழ்நாடு

'ரெப்கோ' வங்கியின் இலவச மருத்துவ முகாம்

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை:ரெப்கோ நுண்கடன் நிறுவனம் சார்பில் நடந்த, இலவச மருத்துவ முகாமில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
ரெப்கோ நுண்கடன் நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டு, சுயதொழில் புரிவோர் மற்றும் மகளிர் சுயஉதவி குழு பயனாளிகளுக்கு, பல்வேறு சேவைகள் செய்து வருகின்றன.இந்நிறுவனம், 1,000 கோடி ரூபாய் இலக்கை அடைந்ததை முன்னிட்டு, ரெப்கோ வங்கி மற்றும் இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கம் சார்பில், இலவச மருத்துவ முகாம், தி.நகரில் நடந்தது.முகாமை, ரெப்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர், ஆர்.எஸ்.இஸபெல்லா, இயக்குனர் என்.பாலசுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்து, முன்னிலை வகித்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். மேலும், மற்ற கிளை அலுவலகங்களிலும், முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X