பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் 62,000 பேர் மனு

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை:சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கு, 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய, 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், 19 லட்சத்து, 15 ஆயிரத்து, 718 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து, 71 ஆயிரத்து, 966 பெண் வாக்காளர்கள், 989 இதர வாக்காளர்கள் என, மொத்தம், 38 லட்சத்து, 88 ஆயிரத்து, 673 வாக்காளர்கள் உள்ளனர்.இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில், தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக, ஜன., 4, 5, 11, 12 ஆகிய விடுமுறை நாட்களில், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, சென்னை மாவட்டத்தில், பெயர் சேர்த்தலுக்கு, 49 ஆயிரத்து, 674, பெயர் நீக்கத்துக்கு, 767 உட்பட, 62 ஆயிரத்து, 260 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப் பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X