சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.77 லட்சம் தங்கம் டாலர்கள் பறிமுதல்

Added : ஜன 14, 2020
Advertisement
 ரூ.77 லட்சம் தங்கம் டாலர்கள் பறிமுதல்

சென்னை:துபாய், அபுதாபி மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட, 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் இலங்கைக்கு கடத்த முயன்ற, 14.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, அமெரிக்கா நாட்டு டாலர்களை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனை
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, 6:25 மணிக்கு, 'ஏர் - இந்தியா' விமானம், சென்னை வந்தது. அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சவுஷன் பாரே, 37, என்பவரை சோதனையிட்ட போது, அவரது ஆசனவாயில் இருந்து, 11.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னையில் இருந்து நேற்று அதிகாலை, 5:55 மணிக்கு, 'ஏர் - இந்தியா' விமானம், கொழும்புவிற்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த, இலங்கையைச் சேர்ந்த, சசிகா ரூபிணி, 49, வசந்தி, 49, ஆகிய இரு பெண்களிடம் நடந்த சோதனையில், இருவரது கைப் பைகளில் இருந்து, அமெரிக்கா நாட்டு டாலர்கள், இந்தியா மதிப்பில், 14.30 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான, துபாயில் இருந்து நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 'ஏர் - இந்தியா' விமானம், சென்னை வந்தது.தங்க கட்டிகள்அதில் வந்த, நாகையைச் சேர்ந்த, முகமது ரிபாயுதீன், 25, சேனி இப்ராகிம், 49 ஆகிய, இருவரிடம் இருந்து, 782 கிராம் தங்க கட்டிகள், நகைகள், 32.18 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான, அபுதாபியில் இருந்து, 'எத்திஹாட் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை, 8:25 மணிக்குச், சென்னை வந்தது.அதில் வந்த, ஹீமாக்கத்துல்லா, 40, என்பவரிடம் நடந்த சோதனையில், அவரது ஆசனவாயில் இருந்து, 18.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 457 கிராம் தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தியவர்களை, கைது செய்து, சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X