பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்ச நேயர் திருக்கோவிலில் திருப்பாவையின், 30ம் பாடல்

Added : ஜன 14, 2020
Advertisement
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்ச நேயர் திருக்கோவிலில் திருப்பாவையின், 30ம் பாடல்

துடியலுார் அருகே ஜங்கமநாயக்கன்பாளையத்தில் உள்ள நவாம்ச அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்ச நேயர் திருக்கோவிலில், நாளை அதிகாலை பக்தர்கள் திருப்பாவையின் 30வது பாடலை பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புமேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவு அருகே ஜங்கமநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கு கடந்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், நவாம்ச அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகள், அனுமன் ஜெயந்தி, ராமநவமி, மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கும். இக்கோவிலில் நாளை அதிகாலை திருப்பாவையின், 30ம் பாடலான, 'வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனைத் திங்கள்...' என தொடங்கும் பாடலை, அதிகாலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.
பாடலின் பொருள்திருப்பாற்கடலைக் கடைந்து, தேவர்களுக்கு அமுதம் வழங்கிய மாதவனை, கேசவனை அழகிய ஆயர்குலப் பெண்கள், அணுகி அருள் பெற்ற வரலாறு, பெரியாழ்வாரின் திருமகளும், தாமரை மலர் மாலையைச் சூடியவளுமான ஆண்டாளால், முப்பது தமிழ்பாடல்களில் சொல்லப்பட்டன. இவற்றைத் தவறாமல் பாடுபவர்கள், பெரிய மலைபோன்ற நான்கு தோள்களும், சிவந்த விழிகளும், அழகிய முகமும் கொண்ட திருமாலின் ஈடு இணையற்ற பொருளைப் பெற்று மகிழ்வார்கள் என்பதே இப்பாடலின் பொருள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X