பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் கொண்டாட்டம்!

Added : ஜன 14, 2020
Advertisement

இந்துஸ்தான் கல்லுாரிக்கு விருதுஇயற்கை அறிவியல் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு, வருடாந்திர கூட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்தது.இதில், சிறந்த பள்ளி, பள்ளி முதல்வர், பள்ளி ஆசிரியர், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டன. இவ்விழாவில், 200க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை பாரதியார் பல்கலை பதிவாளர் முருகன் வழங்கினார். விழாவில், சிறந்த கல்லுாரிக்கான விருது, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை, கல்லுாரி தாளாளர் சரஸ்வதி கண்ணையன் பெற்று கொண்டார்.சமத்துவ பொங்கல்சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் கோபால கிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, 'தமிழரின் பொங்கல் பண்டிகை அனைத்து மதங்களையும், ஜாதிகளையும் கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் சமத்துவ பொங்கலாக திகழ்வதாக' எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் முனைவர் அரசு பரமேஸ்வரன் பொங்கல் பண்டிகையின் பண்பாட்டு வரலாற்றை பதிவு செய்தார். மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X