பொது செய்தி

தமிழ்நாடு

அபாயகரமான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Added : ஜன 14, 2020
Advertisement
 அபாயகரமான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கந்தன்கொள்ளை:கந்தன்கொள்ளை கிராமத்தில், துாண்கள் மற்றும் குடிநீர் தொட்டியின் மேற்புறம் சேதமடைந்து அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் உள்ளது கந்தன்கொள்ளை கிராமம். இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.இந்த குடிநீர், 10 ஆண்டுகளுக்கு மேலாக போதிய பராமரிப்பு இல்லாததால், குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.மேலும், தொட்டியின் மேல் பகுதியில் ஆங்காங்கே சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது.சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X