பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அகற்றாததால் துர்நாற்றம் வீசும் அவலம்

Added : ஜன 14, 2020
Advertisement

ஊத்துக்கோட்டை:திடக்கழிவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் பயன்படுத்தாத நிலையில், மறு பக்கம், ஊராட்சியில் குப்பை அகற்றாததால், துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி ஊராட்சியில், தாராட்சி, காலனி, தொம்பரம்பேடு, பால்ரெட்டிகண்டிகை, ஆலங்காடு ஆகிய ஊராட்சிகள் உள்ளன.இங்குள்ள, 940 வீடுகளில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2018- - 19ல், திடக்கழிவு திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன.ஆனால், அவை பயன்படுத்தாமல், திறக்கப்படாத ஊராட்சி சேவை கட்டடம் அருகே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், குப்பையை அகற்றாமல், தொட்டியை சுற்றி குப்பை கொட்டும் நிலை ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X