குப்பையால் வீதிதோறும் சீச்சீ...

Added : ஜன 14, 2020
Advertisement

குப்பை குவியல்மாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, கணபதிபுதுார், ஐந்தாவது வீதியில், குவியும் குப்பை அள்ளப்படுவதில்லை. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ஜெயசிங் ஐசக், கணபதிபுதுார்.

சாலை முழுவதும் சாக்கடை நீர்காந்திபுரம் காட்டூர் சந்திப்பு ரோட்டில், சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. இச்சாலையில் நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.-முத்துகுமார்,

பழையூர்.

குப்பை எரிப்பால் மக்கள் அவதிபொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம், செங்கப்பக்கோனார் வீதியில் உள்ள, பயனற்ற கட்டட வளாகத்தில், குவியும் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதால், அருகில் வசிப்போர் அவதிப்படுகின்றனர்.- பிரபு, செங்கப்பக்கோனார் வீதி.

ஆக்கிரமிப்பால் அவதிசித்தாபுதுார், திருமலைசாமி வீதியில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்கள் நிற்பது தெரிவதில்லை; அடிக்கடி விபத்து நடக்கிறது.- சுந்தர், காந்திபுரம்.

சாலையை செப்பனிடணும்கவுண்டம்பாளையம் - டி.வி.எஸ்., நகர் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையை செப்பனிட வேண்டும்.- தனபால், டி.வி.எஸ்.,நகர்.

வேகத்தடை வேண்டும்வெள்ளலுார், கஞ்சிக்கோனாம்பாளையம் ரோடு - ரைஸ்மில் ரோடு சந்திப்பில், வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்து நடக்கிறது.- குமார், இடையர்பாளையம்.

குப்பை அள்ள ஆட்கள் வருவதில்லைவெள்ளலுார் சொரூபராணி மைதானம் நிழற்கூரை அருகில், குவியும் குப்பை வாரக்கணக்கில் அள்ளப்படாமல், குவிந்துள்ளது.- சின்னத்தம்பி, வெள்ளலுார்.

பக்தர்கள்முகம் சுளிப்புசாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் உள்ள, ஞான ஈஸ்வரன் கோவில் முன், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.- விக்னேஷ் குமார், சாய்பாபா காலனி.

தண்ணீர் தொட்டி அருகே குப்பைபேரூர் தமிழ் நகரில், மேல்நிலை தண்ணீர் தொட்டி அருகே குவியும் குப்பை, அகற்றப்படுவதில்லை.- கனகராஜ், பேரூர்.

நடைபாதை ஆக்கிரமிப்புஅவிநாசி ரோடு, அண்ணா சிலை அருகில், பெட்ரோல் பங்க்கை ஒட்டி, நடைபாதையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும், வாகனங்களால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- தர்மராஜ், ரேஸ்கோர்ஸ்.

குரங்குகள் தொல்லை அதிகம்காந்திபுரம், ராம்நகர் பகுதிகளில், குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இவை வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மக்கள் அச்சத்தில் உள்ளனர்.- ஸ்ரீதேவி, ராம்நகர்.

குழியில் சிக்கும் பள்ளி வாகனங்கள்போத்தனுார், சபரி நகரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, பணி முடிந்து நீண்ட நாட்களாகியும் மூடப்படவில்லை.- பாலு, போத்தனுார்.

வெள்ளக்கிணர் சாலையில் துர்நாற்றம்துடியலுார் - வெள்ளக்கிணர் ரோடு, ரயில்வே கேட் அருகில், சாலையோரம் குவிக்கப்படும், இறைச்சிக்கழிவால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.- மூர்த்தி,

வெள்ளக்கிணர்.

மரக்கழிவுகளை அகற்றணும்பீளமேடு, பாரதி காலனி, சூரியா கார்டன் பிரதான சாலையோரம், குவிக்கப்பட்டுள்ள மரக்கழிவுகளை, அகற்ற வேண்டும்.-உதயகுமார், சூர்யா கார்டன்.

சாலை நடுவில் கல்; போக்குவரத்து நெரிசல்கணபதி, ராஜவீதியில், சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள, கற்களை அகற்றி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.- ஆதவன், கணபதி.

குழாய் உடைப்பு; தண்ணீர் வீண்சின்னவேடம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம் ரோடு, பகிரதவிநாயகர் கோவில் அருகில், பிரதான போர்வெல் குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாகிறது.- சுமித்ரா,

டேங்க் வீதி.

வாகன ஓட்டிகள் அவதிசெல்வபுரம், எல்.ஐ. சி., காலனியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- முருகேசன், செல்வபுரம்.

நாய் தொல்லை அதிகம்போத்தனுார் - செட்டிபாளையம் ரோடு, குப்பை கிடங்கு அருகில், சுற்றித்திரியும் தெருநாய்கள், வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் விபத்து நடக்கிறது.- ஜான், ஸ்ரீராம் நகர்.

காற்றில் பறக்குது குப்பைசரவணம்பட்டி, விளாங் குறிச்சி ரோடு, அக்கம்மாள் கார்டன், முருகன் நகரில், அள்ளப்படாமல் குவிந்துள்ள குப்பை, காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-பரமேஸ்வரன், முருகன் நகர்.

பஸ்கள் இயக்க வேண்டும்உக்கடம் - சுங்கம் பை-பாஸ் ரோட்டில் பஸ் போக்குவரத்து இல்லாததால் இச்சாலையில் உள்ள தனியார் நிறுவனங்கள் கல்லுாரி, பள்ளிக்கு செல்ல பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.-மணி, ராமநாதபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X