பொது செய்தி

தமிழ்நாடு

மகசூலுக்காக மல்லி செடிகளுக்கு அடி கவாத்து

Added : ஜன 14, 2020
Advertisement
 மகசூலுக்காக மல்லி செடிகளுக்கு அடி கவாத்து

பொன்னேரி:அதிக மகசூலுக்காக, மல்லி செடிகளுக்கு அடிகவாத்து எனப்படும் கிளைகளை வெட்டும் பணியில், மல்லி வளர்ப்பவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி அடுத்த, சிறுவாக்கம், கங்கையாடிகுப்பம், குதிரைப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில், மல்லி தோட்டங்கள் உள்ளன.குண்டு மல்லி, முல்லை என, பல்வேறு வகையாக செடிகள் வளர்க்கப்பட்டு, தினமும், அதிகாலையில் பூக்களை பறித்து சென்னை, கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.மல்லி செடி வளர்ப்பவர்கள் அதிக மகசூலுக்காக ஆண்டுக்கு ஒருமுறை அடிகவாத்து எனக் கூறப்படும் கிளைகளை வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்று அடி கவாத்து செய்வதால், செடிகள் புதிய கிளைகளுடன் செழிப்பாக வளர்ந்து, அதிக பூக்களை கொடுக்கும் என்பதால், இந்த பணியை மேற்கொண்டு உள்ளனர்.தற்போது, மேற்கண்ட கிராமங்களில் அடிகவாத்து செய்யப்பட்ட மல்லி தோட்டங்களில் இலைகள் இன்றி மல்லி செடிகள் உள்ளன. பிப்ரவரி மாத இறுதியில் தான் இங்கு, மல்லி பூக்கள் இருக்கும்.
இது குறித்து மல்லி வளர்ப்பு விவசாயிகள் கூறியதாவது:பெரிய செடிகளாக வளரும்போது அதில் மகசூல் குறைந்துவிடும். அப்போது, அடி கவாத்து செய்யும் பணிகளை துவங்குவோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த அடிகவாத்து பணிகளை மேற்கொள்வோம்.பிப்ரவரி இறுதியில் செடிகள் நன்கு வளர்ந்து, மார்ச் முதல், பூ பூக்க துவங்கி விடும். அடிகவாத்து என்பது, தரையிலிருந்து, 50 செ.மீ., உயரத்தில் உள்ள கிளைகளை வெட்டி விடும் முறையாகும்.காய்ந்த கிளைகளை, நீக்கிவிட்டு, பூச்சி தாக்குதலை தவிர்க்க தாவர பூச்சிக் கொல்லியும் அதன் பின், வளர்ச்சிக்கான மருந்துகளையும் தெளிப்போம். இந்த முறையால் அதிகளவில் பூக்களை மகசூல் செய்து வருமானம் பெற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X