பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லாத போகி கொண்டாடுங்க: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 'அட்வைஸ்'

Added : ஜன 14, 2020
Advertisement
 புகையில்லாத போகி கொண்டாடுங்க: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 'அட்வைஸ்'

கோவை:புகையில்லாத போகி பண்டிகை கொண்டாட, கோவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது.
போகி பண்டிகையை, புகையில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, இந்திய மருத்துவர் சங்க கோவை கிளை செயலாளர் துரைகண்ணன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோவை தெற்கு பொறியாளர் வெங்கடேசன், வடக்கு உதவி பொறியாளர் ரமேஷ், நர்சிங்ஹோம் போர்டு செயலாளர் கார்த்திக்பிரபு, கோயமுத்துார் நுரையீரல் மருத்துவ சங்க பொருளாளர் நந்தகோபால் ஆகியோர்நிருபர்களிடம் கூறியதாவது:உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். காற்று மாசினால் உலகில், 60 நகரங்கள் மாசுபட்டுள்ளன. இதில், நம் நாட்டில், 22 நகரங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இல்லை.போகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன.இதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X