பொது செய்தி

இந்தியா

எஸ்.சி.ஓ.வின் 8-வது அதிசயமாக படேல் சிலை:ஜெய்சங்கர்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (20)
Advertisement
எஸ்.சி.ஓ.வின் 8-வது அதிசயமாக படேல் சிலை:ஜெய்சங்கர்

புதுடில்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இச்சிலை ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படுகிறது.




இந்நிலையில் சீனாவின் தலைநகர் பீய்ஜிங்கை தலைமையகமாக கொண்டுள்ள எஸ்.சி. ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தனது உலக அதிசய பட்டியலில் படேல் சிலையை 8-வது அதிசயமாக இணைந்துள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, 182 மீ உயரம் கொண்ட படேல் சிலை உலகின் மிகவும் உயரமான சிலை என்பதுடன்,மிக சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. இச்சிலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8-வது அதிசய சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு டுவிட்டரில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202018:39:16 IST Report Abuse
sridharan backiyam சிலை வைத்து தான் தேசப்பற்றை நிருப்பிக்க வேண்டுமா?கடந்த 2019 மற்றும் வருட சீன அதிபர் உரை பற்றி பேசுவோம். கிட்டத்தட்ட கடந்த 2019ம் வருடம் ஒரு கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு கொண்டு வந்து உள்ளார்கள்.ஆனால் நமது நாடு உன் பாக்கெட்டிலும் என் பாக்கெட்டிலும் எப்படி எடுப்பது என்ற திட்டத்தை வகுத்து கொண்டு இருக்கிறார்கள்.இது எல்லாம் எப்போ மாறுமோ?
Rate this:
Share this comment
Cancel
Unmai vilambi - madurai,இந்தியா
14-ஜன-202013:25:13 IST Report Abuse
Unmai vilambi வாழ்க காந்தி,நேரு, படேல்
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
14-ஜன-202012:13:54 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு திருவள்ளுவர் சிலை பார்த்து படேல் சிலை அப்போ திருவள்ளுவர் சிலை எந்த இடம் தமிழன் என்று போற்றி கொள்ளும் ஜெய்சங்கர் சொல்லுவாரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X