பொது செய்தி

தமிழ்நாடு

வரதர் - -ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

Added : ஜன 14, 2020
Advertisement
 வரதர் - -ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

ஊத்துக்கோட்டை:சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை, அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாகளில், மார்கழி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும், விடியற்காலை, 4:30 மணிக்கு, திருப்பாவை பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெறும்.தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் இரவு, சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் வரதர்- - ஆண்டாள் கோவிலை வலம் வந்து பின், விழா மேடையில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தம்பதி சமேதரராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், திரளான பக்தர்கள், சீர்வரிசை வைத்து, சுவாமியை தரிசனம் செய்தனர். திருப்பாவை, பஜனை, பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெண்கள் கும்மி பாட்டு பாடி வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X