பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

Added : ஜன 14, 2020
Advertisement
 புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

கடம்பத்துார்:கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.புகையில்லா போகிப் பண்டிகையை கொண்ட வலியுறுத்தி, கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணிக்கு, தலைமையாசிரியர் ரேவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடம்பத்துார் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில், புகையில்லா போகியை கொண்டாடுவோம், எரிக்க மாட்டோம், எரிக்க மாட்டோம் பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்க மாட்டோம் என, மாணவர்கள் கோஷம் போட்டபடி கைகளில் விளம்பர பதாகைகள் ஏந்தியபடி சென்றனர்.பேரணியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயக்குமார் உட்பட, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டை அரசு பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் அருணன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X