தினமலர் வினாடி வினா; மாணவர்கள் வாவ்!| Dinamalar

தமிழ்நாடு

'தினமலர்' வினாடி வினா; மாணவர்கள் 'வாவ்!'

Added : ஜன 14, 2020
 'தினமலர்' வினாடி வினா; மாணவர்கள் 'வாவ்!'

கோவை:'தினமலர்' மெகா வினாடி வினா போட்டியில், மாணவர்கள் அசத்தலான பதில்களால் பார்வையாளர்களை, பிரமிக்க வைக்கின்றனர்.'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து, நடத்தும் இந்த மெகா வினாடி வினா போட்டி, கோவை மாவட்ட பள்ளிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.நேற்று கணபதி எல்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடந்தது. தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 320 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஏ' அணியைச் சேர்ந்த அகல்யா, ஸ்ரேயா ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் தியோபிலஸ் ராஜேந்திர குமார் மற்றும் முதல்வர் ரோஸி மேரி ஆகியோர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். நிகழ்ச்சியை, பள்ளியின் துணை முதல்வர் சபரீஷ், ஆசிரியர் மனோஜ்குமார் ஒருங்கிணைத்தனர்.ஹரி ஓம் மெட்ரிக் பள்ளிஅசோகபுரத்தில் உள்ள ஹரி ஓம் மெட்ரிக் பள்ளியில் நடந்த போட்டியில்,100 பேர் பங்கேற்றனர். இறுதியில், 'சி' அணியைச் சேர்ந்த திவ்யா, பிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியைகள், தேவசேனா, சகிலா, பிரீத்தா, மரியா, சபிதா, சலோமி, நளினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X