பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி மருத்துவமனையில் சுகாதார திட்ட குழுவினர் ஆய்வு

Added : ஜன 14, 2020
Advertisement
 திருத்தணி மருத்துவமனையில் சுகாதார திட்ட குழுவினர் ஆய்வு

திருத்தணி:துாய்மை பாரத இயக்கத்தின், தேசிய சுகாதார திட்டக் குழுவினர், நேற்று, திருத்தணி அரசு மருத்துவமனையில் தரம் குறித்து ஆய்வு செய்து, திருப்திகரமான மதிப்பெண்கள் வழங்கியதால், குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் மத்திய அரசு சிறப்பு நிதி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தேசிய சுகாதார திட்டத்தின், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், இளங்கோவன் தலைமையில், மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, நேற்று காலை, நேரில் வந்து சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ய வந்தனர்.திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி வரவேற்றார்.தேசிய சுகாதார திட்ட மருத்துவ குழுவினர், மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண் உள்நோயாளிகள் வார்டு, காய்ச்சல் மற்றும் மகப்பேறு உட்பட அறுவை சிகிச்சை போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.தொடர்ந்து சுத்தம் மற்றும் சுகாதாரமாக உள்ளதா என, ஆய்வு செய்து, மருத்துவமனையின் கழிவுகளை எப்படி ஆட்கொள்ள, வேண்டும் என்பது குறித்து, ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.
அதை தொடர்ந்து, மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை அழைத்து, ஆலோசனை நடத்தி, நிறை, குறைகள் குறித்து, மாவட்ட தலைமை மருத்துவர் இளங்கோவன் விளக்கினார்.பின், மருத்துவமனையின் தரம் ஆய்வு செய்ததில், 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், திருத்தணி அரசு மருத்துவமனையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என, கூறப்படுகிறது.கடந்தாண்டு, இதே மருத்துவமனைக்கு, 80 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள் உட்பட, சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X