சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதிக்கு, 'கம்பி!'

Added : ஜன 14, 2020
Advertisement

திருவள்ளூர்:இருவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட இருவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வேளகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரை மகன் பூபேஷ். இவருக்கு, நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக கூறி, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன், 54, என்பவர், 3.50 லட்சம் ரூபாய் பெற்று உள்ளார்.ஆனால், வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியதாக பூபேஷ், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த வேல்முருகனை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.l பொன்னேரி வட்டம், மீஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா. இவரிடம், திருப்பூர் மாவட்டம், மணிகண்டன், அவரது மனைவி ராஜலட்சுமி இருவரும் வந்து, ரம்யாவிற்கு சுகாதார மையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணி; அவரது கணவருக்கு பொதுப்பணித் துறையில் பணி வாங்கித் தருவாக கூறி, 4 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.ஆனால், வேலை வாங்கித் தராமல், அவர் கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை என, ரம்யா, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டன் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X