சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய பெண் கவுன்சிலரை கொல்ல முயற்சி

Added : ஜன 14, 2020
Advertisement
 ஒன்றிய பெண் கவுன்சிலரை கொல்ல முயற்சி

திருவாலங்காடு:அ.தி.மு.க., ஒன்றிய பெண் கவுன்சிலரை, நான்கு வாலிபர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக, முன்னாள் கவுன்சிலர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருவாலங்காடு ஒன்றியம், 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, குப்பம்கண்டிகையைச் சேர்ந்த விஜயராகவன் மனைவி ஜீவா, 50, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவர், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். கடந்த, 11ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில், போதிய கோரம் இல்லாததால், மறுதேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.ஒப்படைப்புஇந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், நான்கு வாலிபர்கள், ஒரு கத்தியுடன் கவுன்சிலர் ஜீவா வீட்டிற்கு வந்து, கொலை செய்ய முயற்சித்ததாக அப்பகுதி மக்கள், வாலிபர்களை பிடித்து, திருவாலங்காடு போலீசில் ஒப்படைத்தனர்,ஒன்றிய கவுன்சிலர் ஜீவா, அரக்கோணம் முன்னாள் எம்.பி., திருத்தணி அரியின் தம்பி மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், குப்பம்கண்டிகை அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, 46, திருவாலங்காடு போலீசில் புகார் கொடுத்தார்.புகாரில், 'ஒன்றிய கவுன்சிலர் ஜீவா, சேர்மன் பதவிக்கு போட்டியிட உள்ளதால், எதிர் தரப்பினர் அவரை கொலை செய்ய, நான்கு வாலிபர்களை கத்தி கொடுத்து அனுப்பி உள்ளனர்' என, கூறப்பட்டிருந்தது.
விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள், ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு, 20, நிதிஷ்குமார், 19, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 22, அப்துல் ரசாக், 19, என தெரிய வந்தது.திருத்தணி டி.எஸ்.பி., சேகர் கூறியதாவது:ஒன்றிய பெண் கவுன்சிலரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் நான்கு வாலிபர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.முழு விசாரணை முடித்த பின் தான், உண்மை நிலவரம் தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X