அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை பா. ஜ.,வுக்கு புதிய தலைவர் தேர்வு

Added : ஜன 14, 2020
Advertisement

கோவை:பா.ஜ.,கோவை மாநகர் மாவட்ட தலைவருக்கான தேர்தலில்,ஆர்.நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார்.கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்தவர் சி.ஆர். நந்தகுமார். இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. அதில் சி.ஆர். நந்தகுமார், மாநில செயலாளர் ஆர்.நந்தகுமார்,மாவட்டசெயலாளர் ரமேஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாவட்ட துணை தலைவர் கருமுத்து தியாகராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் மாநில செயலாளர் ஆர்.நந்தகுமாரை, கட்சித்தலைமை நேற்று தேர்வு செய்தது.இவர் 1989ல் கட்சி உறுப்பினராக நுழைந்தவர், கோவை மாநகராட்சியில் கடந்த முறை நடைபெற்ற மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அ.தி.மு.க.,வுக்கு எதிராக அதிக ஓட்டுக்களை பெற்றார். அப்போது நடைபெற்ற வன்முறையில் தாக்கப்பட்டார்.பின், இவருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு முன்பு மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்த இவர், தற்போது மீண்டும் மாநகர் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X