சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

நகரி: சித்துார் மாவட்டம், கே.வி.பி.புரம் அடுத்த, பாத்தபாளையம் காலனியைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 25. இவர், உறவினர் சஞ்சிவிய்யா, 30 என்பவருடன், ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், பிச்சாட்டூர் சென்றார்.அங்கிருந்து வீட்டிற்கு, அதே வாகனத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த போது, துளசிகிருஷ்ணாபுரம் அருகே, எதிரே வந்த இண்டிகா கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த வரலட்சுமி, சம்பவ இடத்திலேயே இறந்தார். சஞ்சவிய்யா காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிச்சாட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
.கஞ்சா விற்ற பெண்ணுக்கு, 'காப்பு!'
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கவரைப்பேட்டை போலீசார் ரயில் நிலைய பகுதியில், நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கு, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த, மாதர்பாக்கம் அருகே, ராமசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி, 24, என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X