சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

ஊழியர்களை தாக்கி பணம் பறிப்புசோழவரம்: சோழவரம் அடுத்த, அலமாதியில், பழைய விமானத்தளம் அருகே, திருவள்ளூர் நெடுஞ்சாலையையொட்டி, குடிநீர் நிறுவனம் நடத்தி வருபவர் மோகன், 36.நேற்று முன்தினம் இரவு, முகமூடி அணிந்த வந்த, நான்கு பேர் கொண்ட கும்பல், குடிநீர் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா, ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தனர்.பணியில் இருந்த ஊழியர்கள், கமல், 24, விஜய், 22, உதயா, 26, ஆகியோரை தாக்கிவிட்டு, கல்லாவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X