ஆளுக்கொரு ரேட்டு... ஆளுங்கட்சி புது ரூட்டு!| Dinamalar

ஆளுக்கொரு ரேட்டு... ஆளுங்கட்சி புது ரூட்டு!

Added : ஜன 14, 2020
Share
அ ன்றைய தினம் சித்ராவின் மொபைல்போனுக்கு அழைத்த மித்ரா, ''அக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன். உணவுத்திருவிழாவுக்கு போகணும்; தயாரா இருங்க,'' என்றாள்.சொன்னபடி சிறிது நேரத்திலேயே வந்தாள் மித்ரா. இருவரும் ஸ்கூட்டரில், அவிநாசி ரோட்டில் பயணிக்கத் துவங்கினர்.''அக்கா, அவிநாசி ரோட்டுல சின்னியம்பாளையம் வரைக்கும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேம்பாலம் கட்டப்போறதா,
 ஆளுக்கொரு ரேட்டு... ஆளுங்கட்சி புது ரூட்டு!

அ ன்றைய தினம் சித்ராவின் மொபைல்போனுக்கு அழைத்த மித்ரா, ''அக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன். உ
ணவுத்திருவிழாவுக்கு போகணும்; தயாரா இருங்க,'' என்றாள்.சொன்னபடி சிறிது நேரத்திலேயே வந்தாள் மித்ரா. இருவரும் ஸ்கூட்டரில், அவிநாசி ரோட்டில் பயணிக்கத் துவங்கினர்.''அக்கா, அவிநாசி ரோட்டுல சின்னியம்பாளையம் வரைக்கும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேம்பாலம் கட்டப்போறதா, மினிஸ்டர் வேலுமணி சொன்னாரே. இப்ப, புதுசா ரோடு போடுறாங்க, பாலம் கட்ட மாட்டாங்களா,'' என ஆரம்பித்தாள் மித்ரா.''மித்து, மினிஸ்டரு, ஒவ்வொரு மீட்டிங்கிலயும் சொல்லிட்டுதான் இருக்காரு. உண்மையை விசாரிச்சா, இன்னும் வரைபடமே 'பைனல்' ஆகலையாம்.

'மெட்ரோ' திட்டமும் பரிசீலனையில் இருக்கு. ரெண்டு திட்டத்தையும் இணைச்சு, ஒரே நேரத்துல செய்றதுக்கும், 'பிளான்' போடுறாங்களாம்.''டிசைன் பைனல் செஞ்சு, அரசாங்கத்துல நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி வாங்கி, டெண்டர் விட்டு, வேலையை தொடங்கணும்னா, குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஆகும்னு, ஹைவேஸ் அதிகாரிங்க பேசிக்கிறாங்க. அதுவரைக்கும் ரோடு தாங்காதுன்னு, ரூ.17 கோடி 'ஒதுக்கி' புதுப்பிச்சிட்டு இருக்காங்களாம்,''அப்போது, மொபைல் போனுக்கு வந்த மெசேஜை படித்த மித்ரா, ''வர்ற, 21ம் தேதி வரைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கச் சொல்லி, தமிழக அரசு ஆர்டர் போட்டிருக்காம்,'' என்றாள்.''மித்து, கடைக்கு, 40ல இருந்து, 50 வரை பேருதான் இன்னும் வாங்காம இருக்காங்களாம்.
வாங்காதவங்க யாருன்னு, 'லிஸ்ட்' எடுத்து, போன்ல கூப்பிட்டு கொடுக்கச் சொல்லியிருக்காங்களாம். அதனால, 21 வரைக்கும் டைம் கொடுத்திருப்பாங்க,''''பொங்கல் பரிசு தொகுப்பு சப்ளை செஞ்சதுல முறைகேடு நடந்திருக்குன்னு பேசிக்கிட்டாங்களே...''''சிவில் சப்ளைஸ் டிபார்ட்மென்ட்டுல, எப்பவுமே ஒதுக்கீடு குறைவாதான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லி, ரேஷன் கடைக்காரங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவாங்க. இந்த தடவை, நிறைய கடைகளுக்கு ஏலக்காய், திராட்சை, முந்திரி, கரும்பு - 90 சதவீதம்தான் சப்ளை செஞ்சிருக்காங்க.''கரும்புல பாதிக்கு பாதி, காய்ஞ்சு போனதை கொடுத்திருக்காங்க. அப்புறம், மீதமாகிடுச்சுன்னு மேட்டுப்பாளையத்துல நடக்கற, யானைகள் முகாமுக்கு அனுப்பி இருக்காங்க. கரும்பு வாங்குனதுல மட்டும் பல 'ல'கரம் சுருட்டிட்டாங்களாம்,''''அக்கா, இப்ப நேர்மையான அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிடலாம் போலிருக்கு.
சமீபத்துல உள்ளாட்சி அமைப்புல ஒன்றிய தலைவர் பதவியை ஆளுங்கட்சிக்காரங்க கைப்பத்துறதுக்கு அதிகாரிகளே உடந்தையா இருந்தாங்களாமே...''''உண்மைதான். அதேநேரம், தி.மு.க.,வினரும் 'சரண்டர்' ஆயிட்டாங்க. மதுக்கரை ஒன்றியம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துல தலைவர் பதவியை, ஈசியா தி.மு.க.,காரங்க கைப்பற்றி இருக்காம். 50 'ல'கரம் கைமாறி இருக்காம்.பதவியை தாரை வார்த்துட்டாங்க.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துல எலக் ஷன் நடத்துன ஆபீசர் நேர்மையானவராம்; அதனால, அவரை 'துாக் கிட்டு', சொல்ற பேச்சை கேக்குற கீழ்நிலை அதிகாரியை நியமிச்சு, ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுத்திருக்காங்க. மதுக்கரை ஒன்றியத்துல குலுக்கல் நடத்தாமலேயே, துணை தலைவர் பதவி, தி.மு.க.,வுக்கு கெடைச்சிருக்கு,''அவர்களை கடந்து சென்ற பஸ்சின் பின்புறம், '50 ஆண்டு கால வளர்ச்சி; 5 ஆண்டுகளே சாட்சி' என்ற விளம்பர பலகை மாட்டப்பட்டு இருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''வி.ஐ.பி.,கள் சிலரது 'மூவ்'களை மத்திய அரசு வேவு பார்க்குதாமே,'' என, வம்புக்கு இழுத்தாள்.''அடடே... ஒனக்கும் தெரிஞ்சு போச்சா. 'மூவ்' மட்டுமில்லை; பண பரிமாற்றம் தொடர்பாகவும், நெருக்கமான உறவுகளையும் கண்காணிச்சுட்டு இருக்காங்களாம்.
ஐ.ஏ.எஸ்., ஆபீசர்ஸ் பேசிக்கிட்டாங்க,''''அப்ப, பொன்னார் பேசியதை கூட்டிக்கழிச்சு பார்த்தா, கூட்டணியில இருந்து வெளியேறிடுவாங்களோ,'' என இழுத்தாள் மித்ரா.''அரசியல்ல எப்பவும், எது வேணும்னாலும் நடக்கலாம்,'' என்றாள்.அதற்குள் கொடிசியா வந்து விட, ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.''அக்கா, பொங்கல் சமயத்துல போக்குவரத்து நெரிசலை தீர்க்குறதுக்காக, கொடிசியாவுக்கு போற வழியில இருக்கற மைதானத்துல சிறப்பு பஸ் இயக்குறாங்களாமே,''''ஆமா, தீபாவளி சமயத்துல இயக்குனாங்க; அரசாங்கத்துக்கு நல்ல வருமானம். அதே மாதிரி, இப்பவும் சிறப்பு பஸ் இயக்குறாங்க. ஆனா, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுல இருந்து கொடிசியாவுக்கு டவுன் பஸ் இயக்க மாட்டேங்கிறாங்களாம். பயணிகள் யாராவது கேட்டா, உயரதிகாரிகள்ட்ட கேளுங்கன்னு அலட்சியமா பதில் சொல்றாங்களாம்.''அப்புறம், சிங்காநல்லுார்ல இருந்து கொடிசியாவுக்கு ஏகப்பட்ட டவுன் பஸ் இயக்குறாங்க.
ஹோப் காலேஜ் சிக்னல் வரைக்கும் போயி, திரும்பி வர கஷ்டப்படுறாங்க. அதுக்கு பதிலா பாலத்துக்கு பக்கத்துல இருக்குற 'டிவைடர்'களை கொஞ்ச நாளைக்கு எடுத்தா, ஈசியா போயிட்டு வரலாம். போக்குவரத்து போலீஸ்காரங்க கருணை காட்டுனா நல்லா இருக்கும்னு டிரைவருங்க பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.உணவுத்திருவிழா டோக்கன் வாங்கி கொண்டு, இருவரும் உள்ளே நுழைந்தனர்.
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மனித தலைகளாக இருந்தது; இசைக்கச்சேரியை ரசித்தபடி, உணவு அயிட்டங்களை கோவை மக்கள் ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்தனர்.ஆளுக்கு ஒரு 'ஸ்பிரிங் பொட்டட்டோ' வாங்கிக் கொண்டு, ஓரமாக நின்று, சுவைக்க ஆரம்பித்தனர். அவர்களை, ஒரு எஸ்.ஐ,, கடந்து சென்றார்.அவரை பார்த்த சித்ரா, ''ஐகோர்ட்டுல நடக்குற வழக்கு விசாரணைக்கு, நேரடியா தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஐ.,களை அனுப்புறது வழக்கம். இப்ப, 'புரமோசன்'ல வந்த எஸ்.எஸ்.ஐ.,க்களை அலைய விடுறாங்களாம். இவுங்க, 55 வயசு கடந்தவங்களா இருக்குறதுனால, உடல்ரீதியா ரொம்பவே கஷ்டப்படுறாங்களாம். மன அழுத்தத்துக்கும் ஆளாகி இருக்கறதுனால, வி.ஆர்.எஸ்., கேக்குறதுக்கு நிறைய பேரு தயாரா இருக்காங்களாம்,'' என்றாள்.
''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். 'கோவை சிட்டி வெஸ்ட்ல பணிபுரியற போலீஸ் அதிகாரி வசூல்ல பட்டைய கிளப்புறாராமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''ஆமா மித்து, இதுக்கு முன்னாடி பணிபுரிஞ்ச இடத்துல, மாசம் ரெண்டு லட்சம் ரூபாய் மாமூல் வாங்குனவராம். இப்ப, செல்வம் கொழிக்கிற ஏரியாவுக்கு பதவி உயர்வுல வந்திருக்கிறாரு. ஸ்டேஷன் போலீஸ்காரங்க புலம்பிட்டு இருக்காங்க. வியாபாரிங்க, வணிக வளாகத்துக்காரங்க ரொம்பவே அதிருப்தியில இருக்காங்களாம்,'' என்ற சித்ராவின் மொபைல்போனுக்கு, ராமருடன், 'மூன்' இணைந்தவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
உணவு திருவிழாவுக்கு வந்திருப்பதாக கூறி, இணைப்பை துண்டித்தாள்.''அக்கா, எனக்கு ஒரு போலீஸ் மேட்டர் தெரியும். சொல்றேன் கேளுங்க. போத்தனுார் ஏரியாவுல மூணு நம்பர் லாட்டரி வித்தவரிடம் பேரம் பேசிய, கம்யூனிசவாதி பெயருள்ள ஒரு ஏட்டய்யா ஆடியோ, 'வாட்ஸ்ஆப்'புல வைரலா பரவியதே. அவரை கட்டுப்பாட்டு அறைக்கு மாத்திட்டாங்களாம். நைட் பத்து மணிக்கு மேல, போதையில இருக்கற ஏட்டையாவை கண்காணிச்சிட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, சிக்கன் லெக் பீஸ் வாங்கினாள் மித்ரா.அப்போது, இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அவர்களை பார்த்த சித்ரா, ''நம்ம மாவட்டத்துல, 55 குழந்தைகள் காப்பகம் இருக்குதாம். குழந்தை பாதுகாப்பு துறையை சேர்ந்தவங்க, ஒவ்வொரு மாசமும் ஆய்வுக்கு போவாங்க. அங்க எல்லாமே சரியா இருந்தாலும், ஏதாச்சும் பொருள் வாங்கித் தரச் சொல்லி, காப்பக நிர்வாகிகளை, சில அலுவலர்கள், 'டார்ச்சர்' செய்றாங்களாம். இத்தனைக்கும் அவுங்க தற்காலிக ஊழியர்கள்தானாம். முடிஞ்ச வரைக்கும் சம்பாதிக்கலாம்னு போற இடத்துல, பொருளா வாங்கி, குவிக்கிறாங்களாம்.
இதுல இன்னொரு கொடுமையான விஷயம் என்னான்னா, பிராண்ட் அயிட்டம் இல்லாத பொருள் வாங்கிக் கொடுத்தா, சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கே திருப்பி அனுப்புறாங்களாம்,''''அதெல்லாம் சரி, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்புல இருக்கறவரு மேல புகார் வந்தாலும், போலீஸ் தரப்புல இன்னும் நடவடிக்கை எடுக்கலையே...'' என நோண்டினாள் மித்ரா.''அதெப்படி நடவடிக்கை எடுப்பாங்க மித்து, ரொம்பவே நெருக்கமானவராச்சே... 'ரியல் எஸ்டேட்' துறையில மிக முக்கிய பொறுப்புல இருக்கறதா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுனாங்க; வருஷத்துக்கு ஒரு தடவை விழா நடத்தி, போலீஸ்காரங்க சில பேருக்கு விருது கொடுத்து, 'கவுக்கறது' அவரது வேலை.''பெட்ரோல் பங்க் விவகாரத்துல, பத்திரிகையாளர் ஒருத்தரை விசாரணைக்கு வரச்சொல்லி, கைது செஞ்சு ஜெயிலுக்கு அனுப்புனாங்க. அது, பாராட்டுக்குரிய விஷயம்.
ஆனா, நில மோசடி செஞ்சுட்டாருன்னு எழுத்துப்பூர்வமா, போலீஸ் கமிஷனர் ஆபீசுல கம்ப்ளைன்ட் கொடுத்தும் கூட, இதுவரைக்கும் எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்யலையே,'' என்றாள் சித்ரா.பேசியபடியே இருவரும் அரங்கை விட்டு வெளியே வந்தனர்.ஸ்கூட்டரை எடுக்கச் சென்ற இடத்தில், 'பிரஸ்' என்கிற ஸ்டிக்கர் ஒட்டிய, உயர் ரக கார் நின்றிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, போலி பத்திரிகையாளர்களை களையெடுக்கச் சொல்லி, ஐகோர்ட் உத்தரவு போட்டிருக்கு.
நம்மூரிலும் செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும்,'' என்றவாறு, கடைசி சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள்.''ஆமா மித்து, பத்திரிகை பெயரை சொல்லிட்டு, ஏகப்பட்ட பேரு சுத்திட்டு இருக்காங்க. அரசு அதிகாரிகளை மிரட்டி, பணம் சம்பாதிக்கிறாங்க. தீபாவளி சமயத்துல அன்பளிப்பு கேப்பாங்க. கொஞ்ச நாளா, பொங்கலுக்கும் கேட்டு, நச்சரிச்சுட்டு இருக்காங்களாம். போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், அடையாள அட்டை கொடுத்திருப்பது, நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்காம்''''நம்ம 'ஆட்சி தலைவர' பத்தி ஒரு மேட்டர் கேள்விப்பட்டேனே...'' என மித்ரா கேட்க, ''அப்படியா, அடுத்த வாரம் சொல்றேன்,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X