பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழ் அனைவரையும் ஒன்றுபடுத்துகிறது'

Added : ஜன 14, 2020
Advertisement

பல்லடம்:பல்லடம் தமிழ்ச் சங்கம் சார்பில், மார்கழி உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்தது.இதில், வரன்பாளையம் மவுன சிவாசல அடிகள் பேசியதாவது:ஆருத்ரா தரிசனம் என்பது, பத்து நாட்கள் நடைபெறும் விழாவாகும். அந்நாட்களில், திருவாசகம், திருவெம்பாவை சொல்ல வேண்டும் என்பது வழக்கம். இலக்கியம் சார்ந்தவை ஸ்தோத்திர நுால்கள். இலக்கணம் சார்ந்தவை சாஸ்திர நுால்கள். இலக்கியத்திலிருந்து தோன்றுவது இலக்கணமாகும். நம் முன்னோர்கள், திருவெம்பாவைக்கு முதலிடம் கொடுத்தனர்.தடுக்கி விழுந்தால் தொடக்கப்பள்ளி என்ற நிலை காமராஜர் காலத்தில் இருந்தது. தமிழ் இலக்கியத்தில், இரட்டிப்பு சிறப்புடையது திருமுருகாற்றுப்படை. அதை, பொருள் தெரியாமல் பாராயணம் செய்பவர்கள் பலர். ஜாதி, மதம், கொள்கையால் வேறுபட்டிருந்தாலும், அனைவரையும் ஒன்றுபடுத்துவது தமிழ் மொழி.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பள்ளி குழந்தைகளின் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X