வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கலாமே! முறைகேடு தடுக்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கலாமே! முறைகேடு தடுக்க எதிர்பார்ப்பு

Added : ஜன 14, 2020

பல்லடம்:தேர்தலில், முறைகேடுகளை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தேர்தல்களின்போது நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், முறைகேடு நடப்பதாக, அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஒரே நபர், இருவேறு இடங்களில் வாக்குகள் வைத்திருப்பதாக, புகார்கள் எழுந்தன. ஆனால், அதுபோன்ற இரட்டை பதிவுகளை கண்டுபிடிப்பது சிரமம் என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துவிட்டனர்.
போட்டோ மற்றும் முகவரி சான்றுக்காக, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தை இணைத்து, புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுகின்றனர். அவ்வாறு, வாக்காளர் அட்டை பெற்றவர்கள், வேறு முகவரிக்கு மாற்றம், அல்லது பணி நிமித்தமாக, வேறு ஊர்களுக்கு மாறுதல் செல்லும் போது, ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி, புதிதாக வாக்காளர் அட்டை பெருகின்றனர்.
அதனால், இருவேறு இடங்களில், அவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெறும். ஆதார் எண், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற இரட்டிப்பு பதிவுகள் கண்டுபிடிக்க முடியும். எனவே, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X