பொது செய்தி

தமிழ்நாடு

'போதையில் செய்யும் தவறு மன்னிக்க முடியாதது!' விவாத மேடையில் மாணவர் ஆவேசம்

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'போதையில் செய்யும் தவறு மன்னிக்க முடியாதது!' விவாத மேடையில் மாணவர் ஆவேசம்

பல்லடம்:திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விவாதமேடை நிகழ்ச்சி, வனாலயம் கூட்ட அரங்கில் நடந்தது.ஆர்.டி.ஓ., க்கள் முருகானந்தம் மற்றும் குமார் விவாத மேடைக்கு தலைமை வகித்தனர்.
சாலை பாதுகாப்பில் பெரும் பங்கு வகிப்பது ஓட்டுனர்களே என்று ஒரு அணியாகவும், பிற சாலை உபயோகிப்பாளர்களே என்று மற்றோர் அணியாகவும், கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.'ஓட்டுனர்களே' என்ற தலைப்பில் பேசிய அணியினர், 'தன் உயிரை பணயம் வைத்து, பிறர் உயிரை காப்பாற்றுபவர்கள் ஓட்டுனர்கள். வாகனங்களில், உடன் பயணிக்கும் பயணிகள், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதில்லை.
பெயர் அளவுக்கே விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறை மீறினால், வாழ்க்கையே இல்லை என்பதை உணர வேண்டும் என, சாலை பாதுகாப்பில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஓட்டுனர்களே!' என பேசினர்.'பிற சாலை உபயோகிப்பாளர்களே!' என்ற தலைப்பில் மற்றொரு அணியினர் பேசியதாவது:வாகன ஓட்டிகள் அனைவரும் மோட்டார் வாகன விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுநர்களின் விதிமீறல் காரணமாக, அவ்வப்போது சட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. 'போதையில், விபத்து ஏற்படுத்தி விட்டேன்,' என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றம்.
பல வாகனங்கள், ஏர் ஹாரன் மற்றும் கண்ணை பறிக்கும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி, இதர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை பயமுறுத்து கின்றனர். காலத்துக்கு ஏற்ப, அரசு போக்குவரத்து விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என, சாலை பாதுகாப்பில் பெரும் பங்கு வகிப்பது, பிற சாலை உபயோகிப்பாளர்கள்.இவ்வாறு, அந்த அணியினர் பேசினர்.
ஆர்.டி.ஓ.,கள் கூறியதாவது:பள்ளி மாணவர்களிடம், பெற்றோர்களே வாகனங்களை தந்து ஊக்குவிக்கின்றனர். இதுபோன்ற நேரத்தில், விபத்து ஏற்படும்போது, பெற்றோர் மீதே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறிய வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 98 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3,400 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202017:03:17 IST Report Abuse
ஆப்பு போதையில். பொது இடங்களில் நடமாடுவதே தவறு. பின்பக்ஜம் பிரம்படி குடுத்து கவுரவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X