பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இயற்கை தோட்டம்; பொதுமக்கள் ஆர்வம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 வீட்டில் இயற்கை தோட்டம்; பொதுமக்கள் ஆர்வம்

அவிநாசி:இயற்கை உரம் பயன்படுத்தி வீட்டுதோட்டம் அமைப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாய நிலத்தில் ரசாயன உர பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், மண்வளம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் காய்கறிகளிலும், சத்து குறைபாடு தென்பட துவங்கியிருக்கிறது.இதனால், இயற்கை விவசாய முறையை மேற் கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. வீட்டுத்தோட்டம் பராமரிக்கும் பொதுமக்கள் பலர் இயற்கை உரம் வாங்கி பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர்.இது குறித்து, உயிர் உர உற்பத்தி நிலைய அலுவலர்கள் கூறியதாவது:பொதுமக்கள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், மண்ணுக்கு கேடு விளைவிக்காத உரங்களை வாங்கி பயன்படுத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டு கின்றனர்.வேளாண் துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்படும் மணிச்சத்து மற்றும் தழைச்சத்து உரங்கள், வேளாண்துறை அலுவலகங்கள் மூலம் விற்கப்படுகின்றன.
பெரியளவில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளும், சிறியளவில் வீட்டுத்தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பொதுமக்களும் இந்த உரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் மண் புழு உரம் மற்றும் இயற்கை உரங்களை வாங்கி பயன்படுத்துவதிலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தில் கந்தக சத்து அதிகம் இருக்கும் என்பதால், அதோடு அரசின் உயிர் உரத்தை கலந்து பயன்படுத்தும் போது, உரம் செறிவு ஊட்டப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X