மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி

Added : ஜன 14, 2020

திருப்பூர்:திருப்பூரில், புதிய மருத்துவக் கல்லுாரி அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்த திட்ட மதிப்பில், 60 சதவீதம், 195 கோடி ரூபாய் மத்திய அரசு பங்காகவும், மீதம், 40 சதவீதமான, 130 கோடி ரூபாயை, தமிழக அரசு செலுத்தவும், உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரிச்சிபாளையம், தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லுாரி அமைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள, 27 ஏக்கரில், ஏற்கனவே, 10 ஏக்கர் பரப்பில் கட்டடங்கள் உள்ள நிலையில், ஏழு ஏக்கர் பரப்பில், மருத்துவக் கல்லுாரிக்கு, கட்டடங்கள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பொதுப்பணித்துறை வாயிலாக கட்டடங்கள் அமையும் இடம், வடிவமைப்பு ஆகியவை குறித்து திட்டமதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவத்துறை வசமுள்ள கட்டடங்கள் மற்றும் பணியிடங்கள், மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.'டீன்' நிர்மலா கூறுகையில், '' மருத்துவத்துறை வசமுள்ள கட்டடங்கள், மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில், அடுத்தடுத்த பணிகள், துரிதமாக மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X