பொது செய்தி

தமிழ்நாடு

கொடுமைப்படுத்தும் மாமியா

Added : ஜன 14, 2020
Advertisement
 கொடுமைப்படுத்தும் மாமியா

திருப்பூர்:ஒன்றரை வயது கைக்குழந்தை மற்றும் கணவர் கலையரசுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வந்த, பல்லடம், பருவாயை சேர்ந்த யுகாசினி, 21, கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தார்.யுகாசினி கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. என் மாமியார், பருவாயில் வசிக்கிறார்.
எனது கணவருக்கு, வேலை வாங்க வேண்டும்; வீட்டுக்கடனை அடைக்க வேண்டும் என கூறியும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருகிறார். இதுவரை, நகை மற்றும், 1.50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளோம்.தற்போது, மேலும், இரண்டு லட்சம் வேண்டுமென கேட்டு, கடந்த ஒரு வாரமாக அடித்து துன்புறுத்தினார். எனது கணவர் நல்லவர்; இருப்பினும், என்னை கொடுமையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. நான் எனது கணவருடன், நிம்மதியாக வாழ, பாதுகாப்பு வழங்க வேண்டுமென, கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X