பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் தனித்திறன் போட்டிகள்

Added : ஜன 14, 2020
Advertisement
 நெய்வேலியில் தனித்திறன் போட்டிகள்

நெய்வேலி:நெய்வேலியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9ல் அமைந்துள்ள என்.எல்.சி.,பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி நடத்தப்பட்டது. நெய்வேலி கிளையின் தலைவர் தாமரை செல்வி தலைமை தாங்கினார். என்.எல்.சி.,கல்வித்துறையின் கூடுதல் முதன்மை பொது மேலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். செயலர் மோகன் வரவேற்றார். என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்க துறையின் துணை பொது மேலாளர் கணேசன் போட்டிகளை துவக்கி வைத்தார். ஓவியம், கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகளை மாவட்ட துணை தலைவர்கள் பாலகுருநாதன், ராணி, விஜயகுமார் ஆகியோர் நடத்தினர்.
இப்போட்டிகளில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், குளூனி மேல்நிலைப்பள்ளி, கேந்திர வித்யாலயா,என்.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 16 பள்ளிகளில் பயிலும் 1,300 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள தேசிய அறிவியல் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
முதலிடத்தை பெறுபவர்கள், பெங்களூரில் அமைந்துள்ள ராணுவ விஞ்ஞான அறிவியல் மையத்தை பார்வையிட அழைத்து செல்லப்படுவர்.போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை பொறுப்பாளர்கள் சிவகுமார், கிருஷ்ணவேணி, பேபிமாலா, செல்வகுமார், மேரி புளோரா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X