பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா நெல் வரத்து துவக்கம்: விருதை மார்க்கெட் கமிட்டி 'பிசி'

Added : ஜன 14, 2020
Advertisement
 சம்பா நெல் வரத்து துவக்கம்: விருதை மார்க்கெட் கமிட்டி 'பிசி'

விருத்தாசலம்:சம்பா அறுவடை துவங்கி, நெல் வரத்து அதிகரித்துள்ளதால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி பிசியானது.
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், உளுந்து, மக்காச்சோளம், வேர்க்கடலை, எள், துவரை, தேங்காய்பருப்பு, ஆமணக்கு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக நெல் வரத்து இல்லாததால், மார்க்கெட் கமிட்டி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சம்பா அறுவடை துவங்கி, நேற்று முதல் நெல் வரத்து அதிகரித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள், உளுந்து, தட்டைப்பயறு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு குவிந்தன.
அதில், பிரதான பரிவர்த்தனை கூடங்களில் நெல் மூட்டைகளும், அகதிகள் முகாம் செல்லும் வழியில் உள்ள கூடத்தில் உளுந்து மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டன.நேற்று நெல் 5,500 மூட்டைகளும், உளுந்து 1,200, மக்காச்சோளம் 650, வரகு 400 உட்பட 8,172 மூட்டை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன.அதிகபட்சமாக எள் 11,389 ரூபாய்க்கும், உளுந்து 7,243, நெல் வகையில் பி.பி.டி., 1,383 ரூபாய்க்கும் விலை போனது. சம்பா அறுவடை துவங்கி, நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்ததால், கமிட்டி வளாகம் பரபரப்பாக இயங்க துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X