பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

பல்லடம்:பல்லடம் வட்டார பள்ளி கல்லுாரிகளில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம் பாரதி மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தாளாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மலர்க்கொடி முன்னிலை வகித்தார். முதல்வர் ரவி வரவேற்றார்.மாணவர்கள் பொங்கலை வரவேற்று கொண்டாடினர். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.l அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, தாளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இயக்குனர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.சிலம்பாட்டம், பறையாட்டம், புலி நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மற்றும் மேஜிக் ஷோ நடந்தது. விளையாட்டு போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.l பல்லடம் அரசு கல்லுாயில் நடந்த பொங்கல் விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். விழாவின், உறியடித்தல், மாட்டு வண்டி பயணம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாரம் பரிய உடைகளில் வந்த மாணவ மாணவியர், உற்சாகத்துடன் பங்கேற்று, பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர்.l அம்பாள் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லுாரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் முன்னிலையில், பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X