பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணம் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா

Added : ஜன 14, 2020
Advertisement
 ஸ்ரீமுஷ்ணம் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 2 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில், புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று காலை, காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த விழாவிற்கு சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் புகழேந்தி வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை சேர்மன் பாலசுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம், ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, சர்க்கரை ஆலை இயக்குனர் குணசேகரன், ஒன்றிய துணை சேர்மன் திருச்செல்வம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பூமாலை.கேசவன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாமிக்கண்ணு, துணை தாசில்தார்கள் பிரகாஷ், சேகர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X