பொது செய்தி

தமிழ்நாடு

பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் 'வெறிச்'

Added : ஜன 14, 2020
Advertisement
 பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் 'வெறிச்'

கடலுார்:குறைந்த அளவு பொதுமக்களே கலந்து கொண்டதால், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டம் களையிழந்து காணப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை காலை 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறும். கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் வருகை தந்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படும்.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து குறைகேட்பு கூட்டம் நிறுத்தப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின் கடந்த வாரம் மீண்டும் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்திலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குறைந்த அளவே மக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். அதன் காரணமாக நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X