பொது செய்தி

தமிழ்நாடு

ஆமணக்கு செடிகளை அரிக்கும் காவடிப்புழுக்கள்: கட்டுப்படுத்த யோசனை

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்பூர்:ஆமணக்கு செடிகளை அரிக்கும் காவடி புழுக்களை கட்டுப்படுத்த, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தின் முன்னோடி செயல் விளக்க திட்டத்தில், அவிநாசி, காங்கயம், தாராபுரம் ஒன்றியங்களில், ஆமணக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆமணக்கு செடியை, புதுவித பூச்சிகள் தாக்க துவங்கியுள்ளன. காவடிப்புழு, 'புரொடினியா', கம் பளி புழுக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை ஈ, சிவப்பு சிலந்தி போன்றவை அதிக சேதம் ஏற்படுத்தி வருகின்றன.இலைப்புழுக்கள், முழுவதுமாக செடியை தின்று அழிக்கின்றன. சில வகை பூச்சிகள், இலைகளை, சல்லடை போல் அரித்துவிடுகின்றன. புரொடியா புழுக்களை, அரிக்கப்பட்ட இலைகளோடு சேகரித்து அழிக்க வேண்டும்.வேப்பங்கொட்டை பருப்புச்சாறு, 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
என்.பி., வைரஸ் நுண்ணு யிரியை தெளித்தும் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.பூஞ்சையால் உருவாகும் இந்நோயால், ஆமணக்கு மகசூல், 100 சதவீதம் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இழந்த ஆமணக்கு விளைச்சலை ஈடுகட்ட, ஏக்கருக்கு, 20 கிலோ யூரியா மற்றும் 12.5 கிலோ பெட்டாஷ் உரங்களை, செடிகளை சுற்றிலும் போட்டு, செடிகளை பாதுகாக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு, 99658 97310 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம், என மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியில் துறை நிர்வாக தனசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X