தமிழ்நாடு

வீண்! சிதம்பரம் நகராட்சியில் லாரி, குப்பை தொட்டிகள்...விற்பனை செய்து பயன்படுத்த மக்கள் கோரிக்கை

Added : ஜன 14, 2020
Advertisement
 வீண்!  சிதம்பரம் நகராட்சியில் லாரி, குப்பை தொட்டிகள்...விற்பனை செய்து பயன்படுத்த மக்கள் கோரிக்கை

சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சியில் ஓரம் கட்டப்பட்ட இரும்பு குப்பை தொட்டிகள் மழை, வெயிலில் துரு பிடித்து வீணாகி வருகின்றன. முற்றிலும் வீணாவதற்குள் விற்பனை செய்து, அதன் மூலம் வரும் பணத்தை வேறு ஏதேனும் உபயோகமான பணிக்கு செலவு செய்யலாம்.
சிதம்பரம் நகராட்சியில் கடந்த காலங்களில் லாரிகள் மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு வந்தது. அதற்காக 2 புதிய லாரிகள் மற்றும் சுமார் 40 க்கும் மேற்பட்ட இரும்பு குப்பை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கப்பட்டன.குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டு, குப்பை கொட்டப்பட்ட பெரிய இரும்பு தொட்டிகள், அப்படியே லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்வது வழக்கம்.தற்போது மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை அந்தந்த இடத்திலேயே தரம் பிரித்து கொடுக்கும் பணி துவங்கியபின் லாரிகளுக்கு வேலை இல்லாமல் போனது. பேட்டரி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் குப்பைகள் அள்ளப்படுகிறது. இதனால், நகராட்சி குப்பை லாரிகள் இரண்டும் ஓரம் கட்டப்பட்டன. அதுமட்டுமின்றி சுமார் 40க்கும் மேற்பட்ட இரும்பு குப்பை தொட்டிகள் ஓரம் கட்டப்பட்டு விட்டன. திறந்த வெளியில் இருக்கும் இவை வெயில், மழையில் நனைந்து துரு பிடித்து வீணாகி வருகின்றன. இதே நிலை இன்னும் 6 மாதம் நீடித்தால் பல லட்சம் பெருமான பொருட்கள் பாழாகும்.
இதை தடுக்க ஓரம் கட்டப்பட்ட லாரி, இரும்பு குப்பை தொட்டிகளை தேவைப்படும் நகராட்சிக்கு கொடுக்கலாம். அல்லது உடனடியாக விற்பனை செய்து அந்த பணத்தை வேறு வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தலாம். இதுபோன்ற வீணாகும் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் விற்பனை செய்து அந்த நிதியை சரியான முறையில் செலவு செய்து நகராட்சியை மேம்படுத்த வேண்டும் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X