தமிழ்நாடு

சொந்த ஊரு, சொர்க்கம்! பொங்கல் கொண்டாட புறப்பட்ட தொழிலாளர்கள்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020
Advertisement
 சொந்த ஊரு, சொர்க்கம்! பொங்கல் கொண்டாட புறப்பட்ட தொழிலாளர்கள்

திருப்பூர்:நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட உள்ள நிலையில், இன்று பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், திருப்பூரில் இருந்து இயக்கப்படும், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.பொங்கல் பண்டிகை கொண்டாட, திருப்பூரில் இருந்து பனியன் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள், குடும்பத்தினருடன் ஏராளமானோர், சொந்த ஊருக்குப் பயணமாகி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், இன்று முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருப்பூரில் இருந்து சேலம் -- 272, மதுரை - 344, திருச்சி - 305, தேனி - 144 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம் பஸ்கள் இயங்குகிறது.புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சந்தைப்பேட்டை தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களும், குமார் நகர் கதர் வாரிய அலுவலக மைதானத்தில் இருந்து கோவை, சத்தி வழியாக செல்லும் பஸ்களும், மதுரை, தேனி, நாகர்கோவில், கம்பம் வழியாக செல்லும் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டில் இருந்தும் பஸ்கள் இயங்கவுள்ளன.கடந்த மூன்று நாட்களாக, பகல் நேரங்களில், சிறப்பு பஸ்களில் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை. இன்று கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று காலை முதல் மாலை வரை முழு அளவில் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இன்று சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க புது பஸ் ஸ்டாண்டில், எட்டு இயக்க குழுவும், பழைய பஸ் ஸ்டாண்டில் நான்கு குழுக்களும் பணியில் ஈடுபட உள்ளது.
சென்னை,பெங்களூருக்குசிறப்பு பஸ்அரசு விரைவு போக்குவரத்து கழகம் சென்னை, பெங்களூருவுக்கு பஸ்களை இயக்குகிறது.இவற்றுக்கான முன்பதிவு முடிந்த நிலையில், கூடுதல் பயணிகள் வந்தால், போக்குவரத்து கழகம் சேலம் வழியாக சென்னைக்கும், சத்தி வழியாக பெங்களூருக்கும் பஸ் இயக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொங்கலுக்கு தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால், நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, திருப்பூர் வெறிச்சோடிக் காணப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X