டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட்: சிவதேவன் சதமடித்து அசத்தல்

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்பூர்:டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், திருப்பூர் அணி வீரர் சிவதேவன் சதமடித்து அசத்தினார்.திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி முருகம்பாளையம் ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது.முதல் போட்டியில், திருச்சூர் அதிரியா கிரிக்கெட் அகாடமி - திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 30 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 259 ரன் எடுத்தது. அதிரடி ஆட்டம் ஆடிய சிவதேவன், ஒன்பது சிக்ஸர், 12 பவுண்டரி என, 91 பந்துகளில், 146 ரன் எடுத்தார்.இலக்கை விரட்டிய திருச்சூர் அணி, 30 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 141 ரன் எடுத்தது. திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன் சிவதேவனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.மதியம் நடந்த மற்றொரு போட்டியில், மைசூரு சி.ஜி.எஸ்., - புதுச்சேரி சுப்புஸ் அகாடமி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி.ஜி.எஸ்., அணி, 30 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 189 ரன் எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த, புதுச்சேரி சுப்புஸ் அணி, 30 ஓவரில், ஒரு விக்கெட்டை இழந்து, 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் வித்தியாசத்தில், மைசூரு சி.ஜி.எஸ்., அணி வெற்றி பெற்றது. இருப்பினும், 19 பந்துகளில், நான்கு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என, 40 ரன்களை விளாசிய சுப்புஸ் அணி பேட்ஸ்மேன் ஹரிஹரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X