பொது செய்தி

தமிழ்நாடு

'மாவட்ட திறன் போட்டிக்கு மாணவரே, தயாராகுங்க!': கலெக்டர் அழைப்பு

Added : ஜன 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:சர்வதேச திறன் போட்டிக்கான, மாவட்ட அளவிலான திறன் போட்டிகள், இம்மாதம் நடைபெற உள்ளது.சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில், 2021 செப்., மாதம் சர்வதேச போட்டி நடக்க உள்ளது. போட்டியில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில், திறன் போட்டி -2020 நடக்க உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.விண்ணப்பதாரர், போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆறு அரசுத்துறைகளில் உள்ள, 47 பிரிவுகளில், ஜன., 20 முதல், 22ம் தேதி வரை, முதல் நிலை தகுதி போட்டி நடக்க உள்ளது.வரும், 23 முதல், 31ம் தேதி வரை, மாவட்ட அளவில் நடக்கும் திறன் போட்டி நாள், இடம் குறித்த விவரம், விண்ணப்பதாரருக்கு, 'இ-மெயிலில்' அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப்' மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, விண்ணப்பதாரர்கள், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை, 0421-2250500 என்ற எண்ணிலோ, tprdtadtrg@gmail.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X