தேசிய அளவிலான செஸ் போட்டி வீனஸ் பள்ளி மாணவிக்கு தங்கம்

Added : ஜன 14, 2020
Advertisement
 தேசிய அளவிலான செஸ் போட்டி  வீனஸ் பள்ளி மாணவிக்கு தங்கம்

சிதம்பரம்:தேசிய அளவிலான செஸ் போட்டியில், சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி சுவர்ணலட்சுமி முதலிம் பெற்று சாதனை படைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தேசிய ஊரக விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த, தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பள்ளி மாணவி சுவர்ணலட்சுமி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.அதே போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி கயல்விழி வெள்ளி பதக்கம் வென்றார். மாணவிகள் இருவரும் சர்வதேச அளவில், நேபாளத்தில் நடந்த செஸ் போட்டியில் இந்திய அளவில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேலும் மாநில அளவில் ஸ்ரீ முஷ்ணத்தில் நடந்த செஸ் போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவன் ஜெய்சரன் இரண்டாமிடமும், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோகன ஸ்ரீராம் 2ம் இடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் வீனஸ் குமார், முதல்வர் ரூபியாள் ராணி வாழ்த்து தெரிவித்தனர். உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, விக்னேஷ், எப்சிமேரி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X