பொது செய்தி

தமிழ்நாடு

பாத்திர தொழிற்சங்கத்தினர் உற்பத்தியாளருடன் சந்திப்பு: புதிய சம்பள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்பூர்:அனுப்பர்பாளையம் வட்டார பாத்திரத் தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற, பாத்திர உற்பத்தியாளர் சங்கங்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு, தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம், கடந்த டிச., 31ம் தேதியுடன், முடிவடைந்தது.புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவது குறித்து,
கடந்த 11ம் தேதி, தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.கூட்டுக்குழு தலைவராக ஏ.டி.பி., தேவராஜ், செயலாளராக சி.ஐ.டி.யு., கே.ரங்கராஜ், பொருளாளராக எல்.பி.எப்., வேலுச்சாமி, கவுரவத் தலைவராக காமாட்சியம்மன் சங்க தலைவர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் கூடிப் பேசி, புதிய ஊதிய உயர்வு கோரிக்கையை உருவாக்கினர்.கூட்டுக்குழு நிர்வாகிகளுடன், ஏ.டி.பி., கலைமணி, சி.ஐ.டி.யு., குப்புசாமி, குபேந்திரன், எல்.பி.எப்., தர்மலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி., செல்வராஜ், நாகராஜன், எச்.எம்.எஸ்., திருஞானம், பாண்டியராஜ், ஐ.என்.டி.யு.சி., ஈஸ்வரன், அசோக்குமார், காமாட்சியம்மன் சங்கம் அர்ஜூனன், பி.எம்.எஸ்., செந்தில், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வும், பித்தளை, செம்பு, வாஸ்து அயிட்டங்களுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவீதமும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை உருவாக்கப்பட்டது.இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை தொழிற்சங்கக் கூட்டுக்குழுவினர், நேற்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், பித்தளை, செம்பு பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்க கூட்டுக்குழுவினரிடம் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஊதிய உயர்வை கால தாமதம் இல்லாமல் வழங்குவதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X