பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் 97 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

Added : ஜன 14, 2020
Advertisement

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய முதற்கட்டமாக 97 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:நடப்பு சம்பா பருவத்தில் கடலுார் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை துவங்கி உள்ளது. 2019-20 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, 97 இடங்களில் முதல்கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.தற்போது கடலுார் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்னரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1835 ரூபாயும், உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக 70 ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.1,905 வழங்கப்படும்.இதேபோல், மத்திய அரசு சாதா ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு 1,815 ரூபாயுடன் தமிழக அரசு போனஸ் தொகையா 50 ரூயாய் சேர்த்து மொத்தம் 1,865 ரூபாய் வழங்கப்படும்.எனவே, சம்பா நெல் விவசாயிகள் விளைபொருட்களை அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் விற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X