சம்பவம் செய்தி

தமிழ்நாடு

600 ரூபாய் கடனை திருப்பிக்கேட்டதால் வாலிபர் கொல்லப்பட்டது அம்பலம்

Added : ஜன 14, 2020
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார் கெருடமுத்துாரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் நந்தகுமார், 24. நண்பர்களான விஜய், 22 என்பவருக்கு, 200 ரூபாயும், சுதாகர், 20 என்பவருக்கு, 400 ரூபாயும் கடன் கொடுத்து உள்ளார்.நேற்று முன்தினம் ஊருக்கு அருகில் மலை மேடு என்ற இடத்திற்கு நந்தகுமார், விஜய், சுதாகர் ஆகியோர் சென்றனர். தாங்கள் வாங்கி வந்த மதுவை விஜய், சுதாகர் இருவரும் அருந்தியுள்ளனர். பின், மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நந்தகுமார் தான் கொடுத்த, 600 ரூபாய் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதில், தகராறு ஏற்பட்டு, பின், அது கைகலப்பாக மாறியது.ஆத்திரத்தில், சுதாகர் நந்தகுமாரை தாக்கியுள்ளார். விஜயும் சுதாகருக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதில், நந்தகுமார் மயக்கம் அடைந்துள்ளார். பயந்து போன அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து தகவல் கொடுத்துள்ளனர். பின், அவரை காரில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விஜய், சுதாகர் இருவரையும் கைது செய்தனர்.வெறும், 600 ரூபாய்க் காக நடந்த அடிதடியில் வாலிபர் பலியாகி, அவரது இரண்டு நண்பர்கள் கம்பி எண்ணுவது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X