பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் ஐயப்ப பக்தர் சபரிமலையில் மரணம்

Added : ஜன 14, 2020
Advertisement
 திருப்பூர் ஐயப்ப பக்தர்  சபரிமலையில் மரணம்

திருப்பூர்,:திருப்பூர் 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர், சண்முகசுந்தரம், 32. சிகரங்கள் அறக்கட்டளை அமைப்பாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரம், மரக்கன்று நடுதல், ரத்த தான முகாம் நடத்துவது என, சமூக பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொண்டார்.திருப்பூர், 15 வேலம்பாளையத்தில், பனியன் ஜாப் ஒர்க் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதியம், சபரிமலைக்கு சென்றார். எருமேலியை கடந்து சென்றபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளித்தும் பயனின்றி, அவர் உயிரிழந்தார். இன்று, அவரது உடல் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது.இளம் சமூக ஆர்வலர் சண்முகசுந்தரத்தின் திடீர் மரணம், திருப்பூர் பகுதி இயற்கை ஆர்வலர்கள், தொழில் துறையினர் மத்தியில், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X